ரஷ்ய என்ணெய் கப்பல் ஒன்றின் மாலுமியை கைது செய்த ஐரோப்பிய நாடு

2 Min Read

ரஷ்ய எண்ணெய் கப்பல் ஒன்றின் மாலுமியை கைது செய்ய ஸ்வீடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வீடன் அதிகாரிகளால்

ரஷ்யாவின் தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றின் சாரதி ஸ்வீடனில் கைது செய்யப்பட்ட நிலையில், Ystad பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

ரஷ்ய என்ணெய் கப்பல் ஒன்றின் மாலுமியை கைது செய்த ஐரோப்பிய நாடு | Sweden Detains Tankers Captain

போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில், வெள்ளிக்கிழமையன்று ஸ்வீடன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த கப்பலானது கொமோரோஸ் கொடியின் கீழ் பயணித்துக்கொண்டிருந்தது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை விதிக்கப்பட்ட கப்பல்கள் பட்டியலிலும் அது இடம்பெற்றிருந்தது. எண்ணெய் ஏற்றுமதிக்காக ரஷ்யா இது போன்ற கப்பல்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி வருகிறது.

தற்போது ஸ்வீடன் நிர்வாகத்திடம் சிக்கியுள்ள இந்த Sea Owl One கப்பலானது சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவிற்கும் பிரேசிலுக்கும் இடையே என்ணெய் ஏற்றுமதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 55 வயதான மாலுமி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 14 நாட்கள் காவலில் வைக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை மாலை, ஸ்வீடனின் தெற்கு முனையில் அமைந்துள்ள ட்ரெல்லெபோர்க்கிற்குத் தெற்கே இருந்தபோது, ​​கடலோரக் காவல்படையினர் அந்த எண்ணெய்க் கப்பலை முற்றுகையிட்டுள்ளனர்.

10 பேர்கள் ரஷ்யர்கள்

மாலுமி சமர்ப்பித்த ஆவணங்கள் போலி என சந்தேகம் ஏற்பட்டதை அடுத்தே, கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் பயணித்த 24 ஊழியர்களில் மாலுமி உட்பட 10 பேர்கள் ரஷ்யர்கள் எனவும் எஞ்சியவர்கள் இந்தோனேசியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் கடத்தும் கப்பல் என சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை, ஸ்வீடன் அதிகாரிகள் கைப்பற்றியிருப்பது இந்த வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். மார்ச் 6 ஆம் திகதி சந்தேகத்திற்கு இடமளிக்கும் இன்னொரு கப்பலையும் ஸ்வீடன் அதிகாரிகள் கைப்பற்றிடிருந்தனர்.

ரஷ்ய என்ணெய் கப்பல் ஒன்றின் மாலுமியை கைது செய்த ஐரோப்பிய நாடு | Sweden Detains Tankers Captain

திருடப்பட்ட உக்ரேனிய தானியங்களைக் கொண்டு செல்வதாகச் சந்தேகிக்கப்பட்ட அந்தக் கப்பல், தற்போது ட்ரெல்லெபோர்க் கடற்கரைப் பகுதியிலும் நங்கூரமிட்டுள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் கடத்தும் கப்பல் என கருதப்படும் பல எண்ணெய் கப்பல்களை இதுவரை பிரான்ஸ் கைப்பற்றியுள்ளது.

2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிகளை மேற்கத்தியத் தடைகள் இலக்காகக் கொண்டுள்ளன.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *