பிரித்தானியாவில் கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார் மோதி 7 வயது சிறுவன் உயிரிழப்பு
சனிக்கிழமை காலை பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்ட்ஷையர்(Staffordshire) பகுதியில் நடந்த கார் விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
அதிகாலை 5 மணியளவில் A38 மற்றும் A5206 சாலைக்கு அருகே இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவசரகால படையினர் விரைந்து வந்த போதிலும், பாதிக்கப்பட்ட சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்து இருப்பதோடு, தேவையான ஆதரவையும் சிறப்பு அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட சாலை 10 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டு இருந்த நிலையில் விசாரணைக்கு பிறகு மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான முழுமையான விவரங்களை சேகரிக்க, விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் அல்லது டேஷ்காம் காட்சிகள் பதிவாகி இருந்தால் அவற்றை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.




