ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறுகிறது.
மழையால் கைவிடப்பட்ட போட்டி
2026 T20 உலக கிண்ணத்தின் 32வது லீக் போட்டி ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே பல்லேகலேவில் இன்று நடைபெற இருந்தது.

ஆனால் பல்லேகலேவில் கனமழை பெய்து கொண்டிருந்ததால், ஒரு பந்து கூட வீசப்படாமலே போட்டி கைவிடப்பட்டுள்ளது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 5 புள்ளிகள் பெற்று ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

B பிரிவில், ஏற்கனவே 6 புள்ளிகளுடன் இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
மேலும், ஏற்கனேவே ஜிம்பாப்வே மற்றும் இலங்கையிடம் தோல்வியை தழுவிய அவுஸ்திரேலிய அணி 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
ஓமனுக்கு எதிரான கடைசி போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், 4 புள்ளிகள் பெற்று 3வது இடமே பிடிக்கும். இதனால் அவுஸ்திரேலியா லீக் சுற்றிலே T20 உலக கிண்ணத்தில் இருந்து வெளியேறுகிறது.

முன்னதாக 2009 T20 உலக கிண்ணத்தில், அவுஸ்திரேலியா லீக் சுற்றிலே வெளியேறியுள்ளது. இது அவுஸ்திரேலியா உலக கிண்ணத்தில் லீக் சுற்றில் வெளியேறுவது 2வது முறை ஆகும்.




