டி20 உலகக்கிண்ணத்தில் ஓமனுக்கு எதிராக இலங்கை அணி 225 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அரைசதம் விளாசல்
பல்லேகேலேவில் இலங்கை மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.
கமில் மிஷாரா 8 ஓட்டங்களிலும், பதும் நிசங்கா 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, குசால் மெண்டிஸ் மற்றும் பவன் ரத்னாயகே அதிரடி ஆட்டத்தில் மிரட்டினர்.
இந்த கூட்டணியின் மூலம் இலங்கை அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அரைசதம் விளாசிய பவன் ரத்னாயகே (Pavan Rathnayake) 28 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த தசுன் ஷானகா (Dasun Shanaka) 20 பந்துகளில் 50 ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் (Kusal Mendis) 61 (45) ஓட்டங்களும் விளாச, இலங்கை அணி 225 ஓட்டங்கள் குவித்தது.





