டி20 உலகக்கிண்ண பயிற்சி ஆட்டம்: நெதர்லாந்து நொறுக்கி ஜிம்பாப்வே அதிரடி வெற்றி

1 Min Read

நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக்கிண்ண பயிற்சி ஆட்டம்

ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கிண்ண பயிற்சி ஆட்டம் கொழும்பில் நடந்தது.

Netherlands vs Zimbabwe

முதலில் ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் குவித்தது.

ரியான் பர்ல் (Ryan Burl) ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 50 ஓட்டங்களும், தியோன் மையர்ஸ் 14 பந்துகளில் 32 ஓட்டங்களும் விளாசினர்.

ஆல்அவுட்

லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளும், ஆர்யன், கைல், கிளாசென், அக்கர்மென் மற்றும் லீட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக வான் பீக் 40 ஓட்டங்களும், எட்வார்ட்ஸ் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் ங்கரவா 3 விக்கெட்டுகளும், மசகட்சா மற்றும் கிரேமர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

Netherlands vs Zimbabwe

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *