ட்ரம்ப் கனடாவை ஆக்கிரமிக்க முயற்சி செய்யலாம்: கனேடியர்கள் கருத்து

1 Min Read

ட்ரம்ப் கனடாவையும் தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யலாம்என மூன்றில் ஒரு பங்கு கனேடியர்கள் கருதுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

ஆய்வு முடிவுகள்

அமெரிக்க அதிகாரிகள் வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்நாட்டின் ஜனாதிபதியைக் கைது செய்து கொண்டுவந்த விடயம் பல நாடுகளுக்கு கவலையை உருவாக்கியுள்ளது.

ட்ரம்ப் கனடாவை ஆக்கிரமிக்க முயற்சி செய்யலாம்: கனேடியர்கள் கருத்து | Most Canadians Believe Us May Try To Invade Canada

Credit : AP

இந்நிலையில், அமெரிக்கா வெனிசுலா விடயத்தில் தலையிட்டது அந்நாட்டின் இறையாண்மையை மீறும் விடயம் என தாங்கள் கருதுவதாக சமீபத்திய ஆய்வொன்றில் 53 சதவிகித கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவின் அந்த நடவடிக்கை, மற்ற நாடுகளும் இதேபோல செயல்பட ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடலாம் என்றும் கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், ட்ரம்ப் எதிர்காலத்தில் கனடாவையும் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யலாம் என தாங்கள் கருதுவதாகவும் 31 சதவிகித கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ட்ரம்ப் கனடாவை ஆக்கிரமிக்க முயற்சி செய்யலாம்: கனேடியர்கள் கருத்து | Most Canadians Believe Us May Try To Invade Canada

அமெரிக்க அரசின் நடவடிக்கை அமெரிக்கா மீதான எண்ணத்தை மோசமானதாக்கியுள்ளதாக 37 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்காகவே அமெரிக்கா அந்நாட்டு விடயத்தில் தலையிட்டதாக தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *