உலகின் Top 5 கடற்படைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
World Directory of Modern Warships and Submarines (WDMMW) வெளியிட்ட 2026 உலக கடற்படை தரவரிசையில், இந்தியா Top 5 பட்டியிலில் இடம்பெறவில்லை.
இந்த பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 11 அணுசக்தி விமானக் கப்பல்கள், Virginia-class attack submarines உள்ளிட்ட மிகப்பெரிய படையுடன், உலகின் சக்திவாய்ந்த கடற்படையாக அமெரிக்கா திகழ்கிறது.
சீனா இரண்டாம் இடத்தில் இருந்து, 3 விமானக் கப்பல்கள், 4வது கட்டுமானத்தில், 2035-க்குள் 9 கப்பல்கள் என்ற இலக்குடன் வேகமாக முன்னேறி வருகிறது.

ரஷ்யா மூன்றாம் இடத்தில், அணு சக்தி கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள், Zircon hypersonic ஏவுகணைகள், Caliber cruise missiles ஆகியவற்றுடன் வலுவான படையைக் கொண்டுள்ளது.
இந்தோனேஷியா நான்காம் இடத்தில், 245 கப்பல்களுடன் “blue-water navy” திறன்களை மேம்படுத்தி வருகிறது.
தென் கொரியா ஐந்தாம் இடத்தில், 155 கப்பல்கள், 22 நீர்மூழ்கிக் கப்பல்கள், 70,000 பணியாளர்கள், மேலும் புதிய FFX Batch IV frigate திட்டத்துடன் ஆசிய-பசிபிக் பகுதியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
ஜப்பான் ஆறாம் இடத்தில் உள்ளது. இந்தியா ஏழாம் இடத்தில் 100.5 “True Value Rating” மதிப்பெண்களுடன் உள்ளது.
இந்திய கடற்படையில் 2 விமானக் கப்பல்கள் (INS Vikrant, INS Vikramaditya), 19 நீர்மூழ்கிக் கப்பல்கள், 74 corvettes, 5 amphibious assault units ஆகியவை உள்ளன. மேலும், 2 Arihant-class அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏவுகணை திறனுடன் செயல்படுகின்றன.
பாகிஸ்தான் 26-ஆம் இடத்தில் உள்ளது. 8 நீர்மூழ்கிக் கப்பல்கள், 28 corvettes மட்டுமே கொண்டுள்ளது. விமானக் கப்பல்கள் எதுவும் இல்லை. சீனாவிலிருந்து AIP-equipped submarines வாங்கப்பட்டாலும், அவை இன்னும் பயிற்சியில் உள்ளன.
2026 உலக கடற்படை தரவரிசையில், ஆசிய நாடுகளில் சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா ஆகியவை முன்னேறிய நிலையில், இந்தியா Top 5-இல் இடம் பெறாதது கவனத்தை ஈர்த்துள்ளது.




