மஹிந்திரா நிறுவனம் தனது புதிய XUV 3XO EV மின்சார SUV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Contents
ரூ.13.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலிருந்து தொடங்கும் இந்த மொடல், இதற்குமுன் இருந்த XUV400 EV-க்கு மாற்றாக வந்துள்ளது.
XUV 3XO EV முக்கிய அம்சங்கள்:
- 39.4kWh பேட்டரி மற்றும் ஒற்றை மின்மோட்டார் – 147 bhp சக்தி, 310 Nm டார்க்.
- ஒரே சார்ஜில் 285 கி.மீ. பயண திறன்.
- Level 2 ADAS, 360 டிகிரி Camera, பனோரமிக் சன்ரூஃப், Harman Kardon 7 ஸ்பீக்கர் சிஸ்டம்.
- 65W Type-C சார்ஜிங், குளிரூட்டும் க்ளோவ் பாக்ஸ், மென்மையான லெதரெட் டிரிம்கள்.

வெளிப்புற வடிவமைப்பு:
ரோஸ் கோல்ட் கிரில் இன்சர்ட்ஸ், 17-இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள், LED பனிமூட்ட விளக்குகள், EV பேட்ஜ்.
சிவப்பு நிற மொடலில் தனிப்பட்ட ரெட் இன்சர்ட்ஸ்.
விலை & வேரியண்ட்ஸ்:
- AX5 வேரியண்ட் – ரூ.13.89 லட்சம்
- AX7L வேரியண்ட் வேரியண்ட் – ரூ.14.96 லட்சம்
- 7.2kW சார்ஜர் வேரியண்ட் – கூடுதல் ரூ.50,000
மஹிந்திரா XUV 3XO EV, Tata Nexon EV-க்கு நேரடி போட்டியாளராக வருகிறது.
பிப்ரவரி 23, 2026 முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி தொடங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.




