இலங்கையின் கொஹுவலையில் துப்பாக்கிச் சூடு! 16 வயது சிறுமி படுகாயம்

0 Min Read

இலங்கையின் கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்த பகுதியில் வீடு ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று(30.12.2025) இரவு நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 16 வயதுடைய சிறுமி காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கொஹுவலையில் துப்பாக்கிச் சூடு! 16 வயது சிறுமி படுகாயம் | Kahuwala Gun Shooting 16 Yrs Old Girl Injured

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்று இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுமி களுபோவில போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *