ஐ.சி.சி. தரவரிசையில் சிறந்த தரநிலைகளை பெற்றார் சமரி

1 Min Read

இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து மகளிர் டி20 சர்வதேச தரவரிசையில் மூன்று பிரிவுகளிலும் தனது சிறந்த தரநிலைக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

டுபாயில் நடைபெற்று வரும் மகளிர் டி20 ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தியதோடு அந்தப் போட்டி அத்தபத்து ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களைப் பெற்று, ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்நிலையில் புதுப்பிக்கப்பட்டிருக்கும் டி20 தரவரிசையில் அத்தபத்து துடுப்பாட்டத்தில் ஆறாவது இடத்தில் இருப்பதோடு பந்துவீச்சில் மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டு 33 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோன்று டி20 சகலதுறை வீராங்கனைகளுக்கான தரவரிசையில் அத்தபத்து 3ஆவது இடத்தில் உள்ளார். குறிப்பாக இந்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் சோபித்த அத்தபத்து மொத்தம் 172 ஓட்டங்களைப் பெற்றதோடு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இது அவர் தரவரிசையில் முன்னேற்றம் காண உதவியுள்ளது.

தவிர புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் டி20 துடுப்பாட்ட வீராங்கனைகளில் இமேஷா துலானி நான்கு இடங்கள் ஏற்றம் கண்டு 18 ஆவது இடத்தைப் பிடித்திருப்பதோடு ஹர்ஷிதா சமரவிக்ரம ஒரு இடம் முன்னேறி 23 ஆவது இடத்தில் உள்ளார். இலங்கை சுழல் வீராங்கனை சுகந்திகா குமாரி டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டு 23ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *