சி.சி.சி. அறக்கட்டளை தனது பிரதான உளநல விழிப்புணர்வு மற்;றும் நிதி சேகரிப்பு பிரசாரத்தின் தொடர்ச்சியாக இவ்வருடம் 13ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில், ‘1333 சைக்கிள் சவாரி 2026’ நிகழ்வை நடத்தவுள்ளது.
நாளை (29) ஆரம்பமாகி எதிர்வரும் செப்டெம்பர் 10 வரை நடைபெறவுள்ள இந்த சைக்கிள் சவாரி நெருக்கடி நேர ஆதரவுச் சேவைக்கான முக்கிய நிதியினையும் விழிப்புணர்வையும் திரட்டும் நோக்கைக் கொண்டது. தேவையுடைய எவருக்கும் இரகசியம் பேணி, உணர்வுபூர்வமான ஆதரவு இலவசமாகக் கிடைப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்தல் என்ற ஒரே பொதுவான நோக்கத்திற்காக, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள சைக்கிள் ஓட்டுநர்களை ஒன்றிணைக்கவுள்ளது. வருடத்தின் 365 நாட்களும், 24 மணி நேரமும் இயங்கும் 1333 சேவையானது, 2009ஆம் ஆண்டு முதற்கொண்டு மக்களுக்கு ஆதரவை வழங்கி வரும் இலவசமான மற்றும் இரகசியம் பேணப்படும் ஒரு நெருக்கடி நேர ஆதரவுச் சேவையாகும். 1333 சைக்கிள் சவாரி ஓகஸ்ட் 10 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பித்து எதிர்வரும் 10 ஆம் திகதி விஹாரமஹாதேவி பூங்காவில் நிறைவரிடயவுள்ளது.




