ஆண் பாதி, பெண் பாதி – மிகவும் விசித்திரமான பறவை கண்டுபிடிப்பு

1 Min Read

Rare half-male half-female bird found in Chicago: ஆண் பாதி, பெண் பாதி தோற்றம் கொண்ட மிகவும் அரிதான பறவை கண்டுபக்கப்பட்டுள்ளது.

விசித்திர பறவை

சிகாகோ நகரத்திற்கு அருகிலுள்ள Barrington Hills பகுதியில் உள்ள Hill ‘N Dale இயற்கை பாதுகாப்பகத்தில், உலகில் மிகவும் அரிதான பறவைகளில் ஒன்றான “அரை ஆண் – அரை பெண்” பாபோலிங்க் (Bobolink) பறவை சில நாட்களுக்கு தங்கியிருந்தது.

 

ஆண் பாதி, பெண் பாதி - மிகவும் விசித்திரமான பறவை கண்டுபிடிப்பு | Rare Half Male Half Female Bird Found In Chicago

இந்த பறவை “Bilateral Gynandromorph” எனப்படும் உயிரியல் விசித்திரம் ஆகும். இதன் வலது பக்கம் ஆண் பறவையின் தோற்றத்தையும், இடது பக்கம் பெண் பறவையின் தோற்றத்தையும் கொண்டது.இது முதல் முறையாக பதிவான Gynandromorphic Bobolink என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த பறவையை முதலில் கண்டுபிடித்தவர் Luke Dahlberg, Citizens for Conservation என்ற அமைப்பின் பாதுகாப்பு திட்ட மேலாளர். அவர் பாபோலிங்க் பறவைகளின் இனப்பெருக்க கால புகைப்படங்களை எடுக்கும்போது, இந்த விசித்திரமான பறவையை கவனித்தார்.

இந்த பறவை ஆண் பறவைகளைப் போலவே பாடியது, பறந்தது, தன் பிரதேசத்தை அமைத்துக் கொண்டு, பெண் பறவையை ஈர்க்க முயன்றது. இறுதியில், அது வெற்றிகரமாக இணை சேர்ந்து, குட்டிகளை வளர்த்தது.

ஆண் பாதி, பெண் பாதி - மிகவும் விசித்திரமான பறவை கண்டுபிடிப்பு | Rare Half Male Half Female Bird Found In Chicago

100 பறவைகள்

விஞ்ஞானிகள் கூற்றின்படி, இத்தகைய பறவைகள் உலகில் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதுவரை 11,000 பறவை இனங்களில் 45 இனங்களில் மட்டுமே சுமார் 100 பறவைகள் இவ்வாறு பதிவாகியுள்ளன.இந்த நிலைமை, பெண் பறவையின் முட்டை உருவாக்கும் செல்களில் ஏற்படும் ஜீனியல் பிழை காரணமாக உருவாகிறது. ஒரு முட்டை கூடுதல் குரோமோசோம்களை பெற்றால், அது இரண்டு விதமான (ஆண் ZZ, பெண் ZW) செல்களாக வளர்ந்து, பறவையின் உடலில் இரு பக்கங்களிலும் வேறுபட்ட பாலின தோற்றத்தை உருவாக்குகிறது.

இந்த அரிதான பறவை தற்போது அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாலும், அடுத்த ஆண்டு மீண்டும் திரும்பி வருமா என்ற எதிர்பார்ப்பு பறவையியல் ஆர்வலர்களிடையே உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *