தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள், 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 2026 மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
2023/2024 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் இடம்பெறும் இந்நேர்முகப் பரீட்சைகள் அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நேர்முகப்பரீட்சைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



