வடக்கில் மக்களின் காணிகளை உரியோரிடம் ஒப்படைக்கவும்

1 Min Read

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டு​மென, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதிச் சட்டத்தின் கீழான சிரம வாசனா நிதியத்தை கலைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் 54 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கப்படுவதாகவும், அதனை விடவும் மாத்தளன் பிரதேசம் மிகவும் பிரயோசனமானது என்றும் தமிழரசுக் கட்சியின் ரவிகரன் எம்.பி கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சர் அவருடன் கலந்துரையாடி,அதில் காணப்படும் குறைபாடுகளை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேவேளை, வட மாகாணத்தில் பாரியளவிலான காணிப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *