இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்திருந்த அவரது கட்சி மற்றும் குடும்பத்தினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அவரை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய 73 வயதான கான், 2022 இல் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் ஆட்சியை இழந்ததோடு தொடர்ச்சியான வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, 2023 ஒகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டி இராணுவ நகரத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து அவரது மகன்கள் தொடர்ந்து கவலை தெரிவித்த நிலையில், சிறையில் இருந்தபோது அவரது வலது கண்ணில் கணிசமான பார்வை இழப்பு ஏற்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

கைதியின் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு, அவரது உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த உத்தரவை நாங்கள் பிறப்பிக்கிறோம் என்று இந்த மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தலைவர் நீதிபதி ஷாஹித் வாஹீத் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *