உக்ரைனுக்கு அவசரமாகத் தேவைப்படும் வான் பாதுகாப்பு கட்டமைப்புக்களைப் பெற்றுத்தர நேட்டோ செயல்பட்டு வருவதாக அதன் பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
ரஷ்யா நேற்று முன்தினம் முன்னெடுத்த தாக்குதல்களில் ஒரு ஏவுகணையைக் கூட உக்ரைன் சுட்டு வீழ்த்தத் தவறியுள்ள நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குளிர்காலத்திற்கு முன்னர் ஏவுகணை உற்பத்தியை மொஸ்கோ கணிசமாக அதிகரிக்க முயன்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, பேட்ரியட் இடைமறிப்பு ஏவுகணைகளின் விநியோகத்தை அதிகரிக்குமாறு நேட்டோ கூட்டணி நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
தேசியப் பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி, ‘ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சமரசம் செய்துகொள்ள அதிக விருப்பமுள்ள நாடாக உக்ரைனை மாற்றுவதை நோக்காகக் கொண்டு மேற்கத்திய கூட்டணி நாடுகளிடன் ஏவுகணை விநியோகம் தாமதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை நிராகரிக்கவில்லை. தேவையற்ற கட்டுப்பாடுகள் அனைத்தையும் களைந்து, தேவையான அரசியல் முடிவுகளை எடுப்பது முக்கியம். உக்ரைனில் உள்ள மக்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள நமது கூட்டாளிகளின் உறுதியைச் சார்ந்துள்ளது என்றுள்ளார். த கார்டியன்




