ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் 17 பேர் பலி, 44 பேர் காயம்

1 Min Read

உக்ரைன் மீது பெலஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டனர் என்று ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுக்குப் பிறகு தொடங்கிய இந்த தாக்குதல்களினால் 44 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு கீயூவ் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் இவை மிக மோசமான தாக்குதல்கள் என்ற ஸெலென்ஸ்கி, குடியிருப்பு கட்டிடங்கள், ரயில் நிலையம் மற்றும் களஞ்சியங்கள் என்பன இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் பெலஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிரான அமெரிக்காவின் பட்ரியட் ஏவுகணை இடைமறிப்புக் கருவிகளை அதிக அளவில் வழங்குமாறு தனது நட்பு நாடுகளை உக்ரைன் கோரிவரும் நிலையில் ரஷ்ய தாக்குதல்களில் இத்தகைய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
நட்பு நாடுகளிடமிருந்து பெலஸ்டிக் எதிர்ப்பு அமைப்புகளைப் பெறுவதில் ஏற்பட்டுவரும் தாமதங்கள் அதிக உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் வழிவகுத்துள்ளது என்றும் ஸெலென்ஸ்கி மேலும் கூறியுள்ளார்.
பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *