சனியின் நட்சத்திர மாற்றம்: ஆகஸ்ட் 20 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

Admin
By
Admin
2 Min Read

சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்ததும், மெதுவாக நகரும் கிரகமாகவும் கருதப்படுகிறார். மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளை விட சனிபகவானின் இயக்கம் ஜோதிடத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

காரணம் சனி ஒருவருடைய கரும விளைகளுக்கு ஏற்ப பாரபட்சம் இன்றி அதற்கான தண்டனையை கொடுத்துவிடுவார். தற்போது சனிபகவான் மீன ராசியில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.

சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்ல, நட்சத்திர மாற்றமும் ஜோதிட ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 20ஆம் தேதி சனிபகவான் கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார்.

அவர் அக்டோபர் 9ஆம் தேதி வரை அங்கு பயணிப்பார். சனிபகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் குறிப்பிடத்தக்க நன்மைகளையும் அதிர்ஷ்ட பலன்களையும் வழங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மிதுனம்

சனியின் நட்சத்திர மாற்றம்: ஆகஸ்ட் 20 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! | Saturn Transit In Revati Nakshatra Who Get Luck

சனிபகவான் புதனின் நட்சத்திரத்திற்குள் நுழைவது மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். நிதி முன்னேற்றம், வெளிநாட்டு பயணம், உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் அதிகரிக்கும்.

துலாம்

சனியின் நட்சத்திர மாற்றம்: ஆகஸ்ட் 20 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! | Saturn Transit In Revati Nakshatra Who Get Luck

இந்த நட்சத்திர மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளை வழங்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும், ஆசைகள் நிறைவேறும்.

தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு, வணிக விரிவாக்கம் போன்ற வாய்ப்புகள் அமையும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்; காதல் வாழ்க்கையும் இனிமையாக அமையும்.

கும்பம்

சனியின் நட்சத்திர மாற்றம்: ஆகஸ்ட் 20 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! | Saturn Transit In Revati Nakshatra Who Get Luck

சனிபகவானின் நட்சத்திர மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு நேரடியாக நல்ல பலன்களை அளிக்கும். ஒத்திவைக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.

தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வழியில் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களின் ஆதரவு வெற்றிக்கு துணையாக இருக்கும். வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு அமையலாம். குடும்பத்தில் நீண்டகால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *