கர்ம வினைகள் நீங்க செய்யவேண்டிய சக்தி வாய்ந்த ஹோமங்கள்…

Karan
By
Karan
2 Min Read

நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் ஹோமங்களுக்கு எப்பவும் அதிக அளவில் சக்தி உள்ளது. அதாவது நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய தடை, தோஷம் இவை எல்லாம் விலக ஹோமங்கள் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதை நாம் புராண காலங்களில் வாழ்ந்த மகான்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஹோமங்கள் செய்து மிகப் பெரிய அளவில் பலன்கள் பெற்றதை நாம் பார்க்க முடிகிறது. அப்படியாக, நாம் என்ன ஹோமம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

கணபதி ஹோமம்:

உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி தடைகள் வந்து கொண்டிருக்கிறது. எந்த ஒரு காரியமும் செய்ய முடியவில்லை என்றால் கட்டாயமாக கணபதி ஹோமம் செய்யலாம்.

சண்டி ஹோமம்:

வீடுகளில் உள்ள தரித்திரம் நீங்க சண்டி ஹோமம் செய்யலாம். இதனால் நேர்மறை ஆற்றல் பெருகும். சுதர்சன ஹோமம்: வீடுகளில் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஆரோக்கிய குறைபாடுகள் வருகிறது என்றால் சுதர்சன ஹோமம் செய்யும் பொழுது நல்ல நிவாரணம் பெறலாம்.

தில ஹோமம்:

பித்ருக்களால் ஏற்படக்கூடிய தோஷம் மற்றும் சாபம் விலக திலகோமம் செய்தால் பித்துருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

ருத்ர ஹோமம்:

நம்முடைய கர்ம வினைகள் மற்றும் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ருத்ர ஹோமம் செய்தால் அதிலிருந்து விடுபடலாம்.

ஆயுஷ்ய ஹோமம்:

நீண்ட நாள் வாழ்க்கைக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் ஆயுஷ் ஹோமம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

லட்சுமி குபேர ஹோமம்:

கடன் தொல்லை மற்றும் பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் பெறவும் லட்சுமி தேவியின் முழு பெறவும் லட்சுமி குபேர யோகம் செய்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.

புத்திர காமேஷ்டி ஹோமம்:

நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்தி கொண்டிருப்பவர்கள் இறைவனை மனதார நினைத்து புத்திர காமேஷ்டி ஹோமம் செய்தால் விரைவில் இறைவனருளால் குழந்தை வரம் கிடைக்கும்.

பிரத்யங்கிரா ஹோமம்:

ஜாதகத்தில் யாருக்காவது சர்ப்ப தோஷம் இருக்கிறது என்றால் அவர்கள் இந்த ஹோமம் செய்யும் பொழுது சர்ப்ப தோஷம் விலகி தடைகள் நீங்கும்.

கண் திருஷ்டி ஹோமம்:

குடும்பங்களுக்கு கண் திருஷ்டியால் நிறைய பாதிப்புகளும் இழப்புகளும் வரும் பொழுது அவர்கள் இந்த கண் திருஷ்டி ஹோமம் செய்வதால் அதிலிருந்து விடுபட்டு நல்ல வாழ்க்கை வாழலாம்.

சத்ரு சம்ஹார ஹோமம்:

எதிரிகள் தொல்லை விலகி பயம் மற்றும் தீய சக்திகளின் தாக்கம் குறைய தொடுகின்ற காரியங்களில் வெற்றி பெறவும் கடன் தொல்லை விலகவும் சத்ரு சம்ஹார யோகம் ஹோமம் செய்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *