வைபவ் சூர்யவன்ஷி அசுர முன்னேற்றம்

1 Min Read

சர்வதேச கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்திருக்கும் இந்தியாவின் பதின்ம வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் டி20 தரவரிசையில் அசுர வேகத்தில் முன்னேறி முதல் 50 வீரர்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.

அண்மையில் நடந்த சிம்பாப்வேயுக்கு எதிரான டி20 தொடரில் 15 வயது சூர்யவன்ஷி மூன்று போட்டிகளிலும் 50.33 சராசரியுடன் மொத்தம் 151 ஓட்டங்களைப் பெற்று தொடர் நாயகன் விருதை வென்றார். இந்தத் தொடரை இந்திய அணி 3–0 என கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட ஐ.சி.சி. டி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் அவர் 230 இடங்கள் ஏற்றம் கண்டு 48 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன்போது அவர் தனது தரநிலைப் புள்ளிகளையும் 536 ஆக அதிகரித்துள்ளார். சூர்யவன்ஷி கடந்த ஜூலை 4ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின்போதே சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.துடுப்பாட்ட வீரர்களுக்கான டி20 தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *