அஸ்வெசும ஜூலை மாதத்திற்குரிய நலன்புரி முதியோர் கொடுப்பனவு இன்று எழுபது வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.அதன்படி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன் அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கிணங்க இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக 3,494,810,000 ரூபா நிதி வழங்கப்பட வுள்ளது.அந்த வகையில் அஸ்வெசும பயனாளிகள் இன்று முதல் தமக்கான முதியோர் கொடுப்பனவை தமது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.




