மேற்கிந்திய தீவுகளுக்கு முதல் டெஸ்டில் வெற்றி

1 Min Read

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 90 ஓட்டங்களால் வெற்றியீட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.

டிரினிடாட், பிரையன் லாரா அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 211 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி ஆட்டத்தின் நான்காவது நாளான நேற்று முன்தினம் (28) தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 40.2 ஓவர்களில் 120 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஜெய்டன் சீல்ஸ் ஐந்து விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸுக்கு 311 ஓட்டங்களை பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 282 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களுக்கே சுருண்டமை குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) போர்ட் ஒப் ஸ்பெயினில் ஆரம்பமாகவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *