வரலாற்றுச் சிறப்புமிக்க 100 மில்லியன் வாகன தயாரிப்பு மைல்கல்லை எட்டிய ஒரேயொரு சீன வாகன தயாரிப்பாளரான SAIC நிறுவனத்தின் பின்னணியைக் கொண்ட IM Motors
உலகளாவிய ரீதியில் 100 மில்லியன் வாகனங்களை விநியோகித்த முதலாவது சீன வாகனக் குழுமமாக SAIC Motor நிறுவனம் உருவெடுத்துள்ளது.
இது உலகளாவிய வாகனத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், இலங்கையில் Evolution Auto (Pvt) Ltd நிறுவனத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் IM Motors வர்த்தகநாமத்தின் தயாரிப்பு பின்னணியையும் வலுப்படுத்துகிறது. SAIC மோட்டார் நிறுவனத்தின் 100 மில்லியனாவது வாகனமாக ‘IM Motors LS9 Hyper’ விநியோகிக்கப்பட்டுள்ளது. இது SAIC Motor நிறுவனத்தின் அடுத்த தலைமுறை உயர் ரக மின்சார வாகன வர்த்தகநாமமாக IM Motors வகிக்கும் பங்கையும், புத்திசாலித்தனமான போக்குவரத்து தீர்வுகளை நோக்கிய அக்குழுமத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த வரலாற்றுச் சாதனை குறித்து Evolution Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டி சொய்சா கருத்துத் தெரிவிக்கையில், “100 மில்லியன் வாகனங்களை விநியோகித்துள்ள SAIC Motor நிறுவனத்தின் இச்சாதனையானது, பல தசாப்த கால பொறியியல் விசேடத்துவம், உற்பத்தித் திறன் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகும்” என்றார்.




