மட்டக்களப்பு பன்சேனை கால்பந்தாட்ட மகளீர் வீராங்கனைகள் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்!

Admin
By
Admin
1 Min Read

36 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா-2026 கடந்த 25,26/07/2026 ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 36 வது தேசியமட்ட பெண்களுக்கான கால்பந்தாட்டத்தில் மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பன்சேனை உதயஔி இளைஞர் கழக வீராங்கனைகள் இரண்டாம் இடத்தை பெற்று சாதித்து தமது திறமையை தேசியரீதியிலும் நிருபித்துள்ளனர்.

வீராங்கனைகளின் வெற்றிக்காக பன்சேனை கிராம மக்கள் மற்றும்,
உதயஔி இளைஞர் கழக உறுப்பினர்கள், பெற்றார்கள் மற்றும் வவுனதீவு இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர், முன்னாள் பயிற்றுவிப்பாளர்களுக்கும், மாணவர்கள் நன்றி கூறினர். இறுதி போட்டி வரை வீராங்கனைகளை பல சவால்களுக்கு மத்தியில் இச் சாதனைக்கு தூண்டு சக்தியாய் இருந்த பயிற்றுனர் ஞா.ரவீந்தினி அவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவர்கள் நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *