தென்சீனக் கடலில் மூழ்கிய வியட்நாம் கப்பல்: 44 மாலுமிகளை பத்திரமாக மீட்ட சீனா

1 Min Read

தென்சீன கடல் பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 44 மாலுமிகளை சீனா மீட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கப்பல்

சனிக்கிழமை தென்சீனக் கடல் பகுதியில் வியட்நாமின் சரக்கு கப்பலான கோய் நிகுவென் 18(Khoi Nguyen 18) விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை தொடர்ந்து கப்பலில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது.

தென்சீனக் கடலில் மூழ்கிய வியட்நாம் கப்பல்: 44 மாலுமிகளை பத்திரமாக மீட்ட சீனா | China Rescue 44 Sailors From Vietnamese Vessel

அதன் ஒரு பகுதியாக உள்ளூர் அதிகாரிகள் விபத்துக்கு நடந்த பகுதிக்கு 6 மீட்புக் கப்பல்களையும், 1 மீட்பு ஹெலிகாப்டர்களையும் அனுப்பி வைத்தனர்.

இந்த மீட்பு பணியில் வியட்நாமிற்கு சொந்தமான கப்பல் ஒன்றும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

44 மாலுமிகள் மீட்பு

இந்நிலையில் வியட்நாம் சரக்கு கப்பலில் இருந்த 44 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக சீனாவின் தெற்கு ஹைனான் மாகாணத்தின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தென்சீனக் கடலில் மூழ்கிய வியட்நாம் கப்பல்: 44 மாலுமிகளை பத்திரமாக மீட்ட சீனா | China Rescue 44 Sailors From Vietnamese Vessel

கப்பலில் மொத்தம் 62 பேர் இருந்த நிலையில், தற்போது 44 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள நபர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *