கண்டியை வீழ்த்தியது கொலம்போ கெப்ஸ்

1 Min Read

கண்டி ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய கொலம்போ கெப்ஸ் இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் வெற்றியை பெற்றது.

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் (19) நடந்த இந்தப் போட்டியில தனது முதல் ஆட்டங்களில் தோல்வியுற்ற நிலையிலேயே இந்த இரு அணிகளும் களமிறங்கின. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கண்டி றோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 179 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய கண்டி அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஜனித் லியனகே ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற தம்புள்ள சிக்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *