உலக அழகிப் போட்டியில் முதல்முறையாக பாகிஸ்தான்: யார் அந்த பெண்?

1 View
1 Min Read

பாகிஸ்தான் நாடு உலக அழகிப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்க உள்ளது.

பாகிஸ்தான்

உலக அழகிப் போட்டியில் ஆசிய நாடான பாகிஸ்தான் பங்கேற்காமல் இருந்து வந்தது.

Anniqa Jamal Iqbal

இப்போட்டி பாரம்பரிய நீச்சலுடை சுற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது பாகிஸ்தானின் பங்கேற்பை தடுத்து நிறுத்தியது.

ஆனால் தற்போது, பல ஆண்டுகளாக சர்வதேச அழகிப் போட்டிகளில் விலகி இருந்த பாகிஸ்தானின் பங்கேற்பு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.

2023-ஆம் ஆண்டில், எரிகா ராபின் என்ற பெண் Miss Universe போட்டியில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண்மணி ஆனார்; இது ஒரு மிக முக்கியமான தருணமாக அமைந்தது.

போட்டியின் முக்கியப் பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் நீச்சல் உடைச் சுற்றின்போது, அவர் ‘புர்கினி’ அணிந்து தோன்றியது நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக பேசப்பட்டது.

Anniqa Jamal Iqbal

அனிகா

இருப்பினும், பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் அவருக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை.

இந்த நிலையில், 24 வயதான அனிகா ஜமால் இக்பால் (Anniqa Jamal Iqbal) பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இதன்மூலம் 73 ஆண்டுகளில் முதல் முறையாக பாகிஸ்தான் இப்போட்டியில் பங்கேற்க உள்ளது. அனிகா, லாகூரில் நடைபெற்ற விழாவில் Miss World Pakistan 2026 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Anniqa Jamal Iqbal

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *