நீட் தேர்வில் சாதித்த மாடு மேய்ப்பவரின் மகள்

1 Min Read

மாடு மேய்ப்பவரின் மகளான பிரியதர்சினி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

நீட் தேர்வில் சாதித்த மாணவி

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

2026 – 2027 மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, கடந்த ஜூன் 22 ஆம் திகதி மறுதேர்வு நடத்தப்பட்டது.

20 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய இந்த மறுதேர்விற்கான முடிவுகள் நேற்று வெளியானது.

நீட் தேர்வில் சாதித்த மாடு மேய்ப்பவரின் மகள் | Cowherd Worker Daughter Achieves In Neet Exam

இதில், மாடு மேய்ப்பவரின் மகளான பிரியதர்சினி 502 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் வடக்கு குமரன் சாலையில் வசித்து வரும் தமிழரசன், பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

இவர்களது மகள் பிரியதர்ஷினி, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வரை படித்துள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற இலக்குடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இவர், இந்த நீட் மறுதேர்வில் 502 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

பிரியதர்ஷினி 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பாணை வந்த பின்னர் அதில் கலந்து கொள்வார்.

பயிற்சி மையம் சென்றாலே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் எனக்கூறப்பட்டு வரும் நிலையில், பிரியதர்ஷினி வறுமையை தாண்டி சாதித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *