இந்தியாவின் 1ஆவது ஹைட்ரஜன் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

2 Min Read

நாட்​டின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்​தி​யா​வில் ஹைட்​ரஜன் எரிபொருளில் இயங்​கும் வகையி​லான ரயில் இன்​ஜினை தயாரிக்க கடந்த 2021ஆம் ஆண்டுமுயற்​சிகள் தொடங்​கின. ரூ. 136 கோடி மதிப்​பீட்​டில் வடக்கு மண்டல ரயில்வே இத்திட்​டத்தை 2022 ஏப்​ரலில் தொடங்​கியது.

இத்திட்​டத்​துக்​கான டெண்​டர் ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த மேதா நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டது. இந்​நிறு​வனம்​தான் எரிபொருட்​களை சப்ளை செய்​கிறது. ஹைட்​ரஜன் ரயிலை வடிவ​மைக்​கும் பணி​கள் சென்னை பெரம்​பூரில் உள்ள ரயில் பெட்டிதொழிற்​சாலை​யில் (ஐசிஎஃப்) நடை​பெற்​றன. பணி​கள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்​டங்​களும் நடை​பெற்​றன.

இதையடுத்​து, ரயிலை அறி​முகப்​படுத்த கடந்த மே 22ஆம் தேதி ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​தது. இந்​நிலை​யில், நாட்டின் முதலாவது ஹைட்​ரஜன் ரயி​லை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜேர்​மனி​யில் முதன்​முதலாக உலகின் முதல் ஹைட்​ரஜன் பயணி​கள் ரயில் 2018ஆம் ஆண்​டில் இயக்​கப்​பட்​டது. பின்னர் ஜப்​பான், சீனா, அமெரிக்கா தங்​கள் நாடு​களில் தயாரிக்​கப்​பட்ட ஹைட்​ரஜன் ரயிலை இயக்​கின என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

தமிழகத்துக்கு பெருமை சேர்க்​கும் வித​மாக, இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க முதல் ஹைட்​ரஜன் ரயில், சென்னை பெரம்​பூரில் உள்ள ஒருங்​கிணைந்த ரயில் பெட்டி தொழிற்​சாலை​யில் (ஐசிஎஃப்) முழு​மை​யாக வடிவ​மைக்​கப்​பட்டு தயாரிக்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

சுற்​றுச்​சூழலுக்கு கேடு விளைவிக்​காத இந்த ஹைட்​ரஜன் ரயில், ஹரி​யானா மாநிலத்தின் மின்​மய​மாக்​கப்​ப​டாத 89 கி.மீ. நீள​முள்ள ஜிந்த் – சோனிபட் வழித்​தடத்​தில் உள்ள 12 ரயில் நிலை​யங்​களை இணைக்​கும் வகை​யில் இயக்​கப்​பட​ உள்​ளது. இந்த ரயில் தின​மும் 2 முறை இரு​மார்க்​கங்​களி​லும் இயக்​கப்​படும். ஏழை, நடுத்தர மக்​கள் பயன்​பெறும் வகை​யில் இதன் பயணக் கட்​ட​ணம் மிகக் குறை​வாக ரூ.5 முதல் அதி​கபட்​ச​மாக ரூ.25 வரை (இந்திய மதிப்பில்) மட்​டுமே நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த ரயில் பாரம்​பரிய டீசல் அல்​லது மின்​சார வயர்​களுக்கு பதிலாக, அதிநவீன 1200 கிலோ​வாட் ஹைட்​ரஜன் எரிபொருள் மின்கல தொழில்​நுட்​பத்​தில் இயங்​கு​கிறது. ரயில் வேகம் எடுக்​கும்​போது உந்​துதலை தர லித்​தி​யம் பெரோ பாஸ்​பேட் பேட்​டரி​களும், ரயில் வேகம் குறை​யும் போது பேட்​டரியை தானாகவே ரீசார்ஜ் செய்​யும் மறுஉரு​வாக்க தொழில்​நுட்​ப​மும் இணைக்​கப்​பட்​டுள்​ளன.

ஹரி​யா​னா​வின் ஜிந்த் ரயில் நிலை​யத்​தில் தொடக்க விழா நிகழ்ச்​சிகள் நடை​பெறவுள்​ளன.

இந்த ரயில் அறி​முக நிகழ்ச்​சி​யுடன் ரூ. 14,700 கோடி மதிப்​பிலான பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​கள், பல்​வேறு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​தல் போன்ற நிகழ்ச்​சிகளி​லும் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார்.பின்னர், ஹரி​யா​னா​வில் ரூ. 12,470 கோடி, சண்டிகரில் ரூ. 4,700 கோடி, பஞ்சாபில் ரூ. 5,470 கோடி மதிப்​பிலான பல்​வேறு வளர்ச்​சித்​ திட்​டங்​களையும் பிரதமர் தொடங்​கி வைக்​க உள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *