எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
உக்ரைனின் தொடர் தாக்குதல்களால் நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பது அவசியம் என்று நேற்று முன்தினம் கூறிய ரஷ்யாவின் பிரதிப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், டீசல் ஏற்றுமதித் தடையை உறுதிப்படுத்தியதோடு ஜூலை 31 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
டீசல் உள்ளிட்ட எரிபொருள் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் உள்நாட்டுச் சந்தையில் அவற்றின் விநியோகத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ரஷ்ய எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளதால் சில பகுதிகளில் டீசல் விநியோகம் ஏற்கனவே பெரிதும் குறைந்துள்ளது. அதனால், பெற்றோல் நிலையங்களில் தினசரி நீண்ட வரிசைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. டெலிகிராப்




