பயங்கரவாதத்திற்கு அனுசரணை அளிக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து சிரியா நீக்கப்படும் என்று அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிரியா மீதான தடைகளை நீக்குவதானது சர்வதேச வர்த்தகத்திற்கும் முதலீடுகளுக்கும் கதவுகளைத் திறந்துவிடும், சிரியாவை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பை வழங்கும். அது சிரிய மக்களுக்கு ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாக வழிவகுக்கும்.
தன்னிடமும் அதன் அண்டை நாடுகளிடமும் அமைதியுடன் இருக்கும் ஒரு நிலையானதும், ஒன்றுபட்டதுமான சிரியா, பிராந்தியத்திற்கும் முழு உலகிற்கும் பயனளிக்கும்.
45 நாட்கள் முன் அறிவிப்புக் காலத்திற்குப் பிறகு, இதனை நீக்கும் தனது நோக்கம் நேற்று முன்தினம் காங்கிரஸுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். 2024 இல் பஷர் அல் அசாத் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின், இதனை இனியும் நீடிக்க காரணம் இல்லை என்று சட்டமியற்றுபவர்கள் கூறியதால், இதனை நீக்குவதற்கு காங்கிரஸில் இரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. சி.என்.என்.




