சூரிய ஒளியைப் பயன்படுத்தி மீன் உலர்த்தும் அதிநவீன கூடங்கள்

1 Min Read

கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நன்னீர் மற்றும் கடல்நீர் மீன்பிடித் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி, நுகர்வோருக்கு ஆரோக்கியமான தயாரிப்புகளை வழங்கும் நோக்கில், விஞ்ஞான ரீதியான மீன் உலர்த்தும் கூடங்களை அமைப்பதற்கான முன்னோடித் திட்டம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் அண்மையில் வத்தளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் விடதா (VIDATHA) பிரிவினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி, வத்தளை மற்றும் நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுகளை மையமாகக் கொண்டு 3 மீனவர் சங்கங்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனம் (ITI), நாரா (NARA) நிறுவனம், ஜனதக்ஷன் மற்றும் நோர்ட் (NERD) நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு வள பங்களிப்பை வழங்கவுள்ளன. இதற்கு மேலதிகமாக, மீன்பிடி வளங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளுக்கு பெறுமதி சேர்ப்பதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமும் இதற்கு இணையாக நடத்தப்படவுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *