நாட்டில் நிலையான அமைதியும், அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன், மஸ்கெலியா பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கிய 19ஆவது ஆண்டு பாதயாத்திரை (04) பக்தி பூர்வமாக ஆரம்பமானது.
இந்த பாதயாத்திரையில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப் பெருமானின் திருநாமங்களைப் பாடியவாறும், காவடிகள் மற்றும் பூஜைப் பொருட்களை ஏந்தியவாறும் பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஹட்டன் நகரை வந்தடைந்த பாதயாத்திரை குழு, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி வழியாக தங்களது பயணத்தைத் தொடர்ந்து சென்றது. பாதயாத்திரையின் போது பல பக்தர்கள் காவடி சுமந்தும், விரதத்தை கடைப்பிடித்தும் பக்தி பரவசத்துடன் பயணித்தனர்.




