கொழும்பு, மட்டக்குளி பகுதியில் ஐந்து கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, மட்டக்குளி பெர்கியூசன் வீதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின்போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 5 கிலோ மற்றும் 140 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பைச் சேர்ந்த இந்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




