Enterprise Risk Governance ஐ உலகளாவிய தரநிலைக்கு மேம்படுத்தியது டயலொக்

1 Min Read

இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது Enterprise Risk Management (ERM) ஆளுமையை (governance) Quality Austria Central Asia Private Limited நிறுவனத்தின் மூலமாக ISO 31000:2018 கோட்பாடுகளுக்கு அமைவாக சுயாதீன சரிபார்ப்பிற்கு (independent validation) உட்படுத்தி வலுப்படுத்தியுள்ளது. இந்த சாதனை, டயலொக் நிறுவனத்தின் விரிவடைந்து வரும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைத் தொகுப்பு முழுவதும் நிலையான வளர்ச்சி, பங்குதாரர்களின் நம்பிக்கை மற்றும் உலகளாவிய ரீதியில் ஒத்திசைந்த இடர் மேலாண்மையை ஆதரிக்கும் அதே வேளையில், நெகிழ்ச்சியான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

டயலொக் இன் risk management தரநிலையானது முறையானது, நிறுவனம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டது மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போகிறது என்பதை இந்த சரிபார்ப்பு உறுதிப்படுத்துகிறது. இலங்கையில் ISO 31000 கோட்பாடுகளுக்கு அமைவாக சுயாதீன சரிபார்ப்பை பெற்ற முதல் தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற வகையில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றிற்கான வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய டயலொக் தனது ஆளுமை நடைமுறைகளை மேலும் பலப்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *