இந்தியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய ரஷ்யா திட்டம்

1 Min Read

முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்களின் விளைவாக இந்தியாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்கள், பெற்றோல் மற்றும் ஜெட் எரிபொருள் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்த ரஷ்யப் பிரதிப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், எரிபொருள் இறக்குமதி குறித்து கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து பெற்றோல் இறக்குமதி செய்யும் எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி மானியங்களை அறிமுகப்படுத்தும் வகையில் ரஷ்யாவின் வரிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்று ஆர்.பி.சி தெரிவித்துள்ளது.

எரிபொருளுக்கான சில்லறை விலைகளைக் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கவென எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையை விரிவுபடுத்தும் வகையில் இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய சந்தையில் நிலவும் பெற்றோலின் உத்தேச விலை மற்றும் இந்தியத் துறைமுகங்களிலிருந்து ரஷ்யாவுக்கு எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான கப்பல் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மானியம் தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி சுமார் 25 சதவீதம் குறைவடைந்துள்ளதோடு எண்ணெய் சுத்திகரிப்பும் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரொய்ட்டர்ஸ், கியூவ் போஸ்ட்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *