மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு கழகம் நடத்திய 16 ஆவது படுவான் சமர் கால்பந்தாட்டப் போட்டியில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.
கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (21) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பட்டிப்பளை வைரவர் அணியை எதிர்கொண்டு ஈஸ்வரா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. தொடரில் அதிகூடிய கோலினை பெற்றுக் கொடுத்த தரிசனன் தங்க பாதங்கள் சிறப்பு விருதை வென்றதுடன் தொடரின் ஆட்டநாயகனாக மோ. டிசேந் மற்றும் சிறந்த விளையாட்டு வீரராக எம்.சேது தெரிவு செய்யப்பட்டனர்.




