மொஸ்கோவைப் பாதுகாப்பதற்காக தனது வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை முன்னரங்கு பகுதியிலிருந்து ரஷ்யா மீளப் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக ரஷ்யத் தலைநகர் மீது ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் தாக்குதலுக்கு உள்ளான மொஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கோபுரத்தில், புதிய பன்சிர் விமான எதிர்ப்பு ஏவுகணை மற்றும் துப்பாக்கி கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.கபோட்னியா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சில நூறு மீற்றர் தொலைவில் இந்த அமைப்பு நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது
மொஸ்கோவின் 40 சதவீத எரிபொருளை உற்பத்தி செய்யும் இச்சுத்திகரிப்பு நிலையம், கிரெம்ளினிலிருந்து வெறும் 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது.தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக மொஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் நேற்று தங்கள் செயல்பாடுகளை நிறுத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.




