எல்- நினோ காலநிலை தொடர்பில் அரசு மிகுந்த கவனம்

2 Min Read

எதிர்வு கூறப்பட்டுள்ள எல்-நினோ காலநிலை நிலைமைகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதுடன் அதற்கு முகங்கொடுப்பதற்கான திட்டங்களையும் வகுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட அதனோடு சம்பந்தப்பட்ட குழுக்கள் அதன் சாத்தியமான நிலைமை தொடர்பில் சில எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ள நிலையில் அவற்றை கவனத்திற்கொண்டே எதிர்காலத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும் அதன் பாதிப்பைக் குறைத்து, தேவையான முன் ஆயத்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,

அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி வருவதுடன் ஜனாதிபதியின் தலைமையில் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தத்தமது அமைச்சுக்கள் மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் எல்-நினோ நிலை தொடர்பில் சில எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளதாகவும், அது குறித்து அவதானம் செலுத்தி, அடுத்த வருடத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு எதிர்காலத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் என்ற வகையில் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, குறிப்பாக விவசாயம் உள்ளிட்ட உணவு உற்பத்தி மற்றும் நீர் வளங்கள் போன்ற பல துறைகள் சம்பந்தமாக ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜூலை, ஓகஸ்ட் காலப்பகுதியிலும் அதனையடுத்து அடுத்த வருடத்திலும் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பில் அமைச்சர்கள் தத்தமது அமைச்சுகளின் ஊடாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது கலந்துரையாடி திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

குறிப்பாக, அடுத்த போக விவசாயச் செய்கையின் போது நிலைமைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட அதனோடு சம்பந்தப்பட்ட குழுக்கள் அதன் சாத்தியமான நிலைமை தொடர்பில் சில எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளன.

அவற்றையும் கருத்திற்கொண்டே எதிர்காலத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதன் பாதிப்பைக் குறைத்து, தேவையான முன் ஆயத்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *