தெல்தெனிய காரிலிருந்து மீட்கப்பட்ட சடலம்: சடலத்தை காரில் ஏற்றும் காதலனின் CCTV காட்சிகள் அம்பலம்

1 Min Read

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகே கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று (17) மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், குறித்த பெண் ஜூன் 03ஆம் திகதி முதல் ஜூன் 16 ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் காதலன் என நம்பப்படும் நபரே, சடலம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் வெலிகம பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது கொலையா அல்லது வேறு விதத்தில் நிகழ்ந்த மரணமா என்பதைத் தீர்மானிப்பதற்காக நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நுவரெலியாவில் உள்ள ஒரு விடுதியில் இருந்து, இறந்த பெண்ணை அவரது காதலன் என நம்பப்படும் நபர் தூக்கிச் செல்லும் CCTV காட்சிகள் இப்போது வௌியாகியுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *