பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியை பலி

1 Min Read

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி, பூனாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (18) காலை கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை, பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய 56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பூனாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *