இலங்கை மகளிர் இளையோர் அணியினர் இந்தியா பயணம்இலங்கை மகளிர் இளையோர் அணியினர் இந்தியா பயணம்

1 Min Read

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக இம்மாத நடுப்பகுதியில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் ஜூன் 18 ஆம் திகதி இந்தியா புறப்பட்டுச் செல்லவுள்ள இலங்கை இளையோர் அணி சென்னையில் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் ஆடும். இதன் முதல் போட்டி ஜூன் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அடுத்த இரு போட்டிகளும் ஜூன் 24 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மோதும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி எதிர்வரும் ஜூன் 30 திகதியும் அடுத்த இரு போட்டிகளும் ஜூலை 3 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *