தாய்வானின் கடலோரக் காவல்படையுடன் இராணுவம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ நேற்று தெரிவித்தார். தாய்வானின் கிழக்குப் பகுதியில் சீனக் கடலோரக் காவல்படையினர் ரோந்துப் பணிகளை ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானும் பிலிப்பைன்ஸும் தங்கள் கடல் எல்லைகளை வரையறுப்பது குறித்து முறையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து தாய்வானின் கிழக்குப் பகுதியில் உள்ள கடற்பரப்பில் விஷேட கடல் போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தை மேற்கொள்வதற்காக கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகங்கள் கடந்த சனியன்று பிற்பகுதியில் தெரிவித்தன. சீனக் கப்பல்களை எச்சரித்து விரட்டுவதற்காக தாய்வானின் கடலோரக் காவல்படை தனது சொந்தக் கப்பல்களை அனுப்பியதுடன், அவை தடைசெய்யப்பட்ட கடற்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தாய்வான் நேற்று முன்தினம் குறிப்பிட்டது. ரொய்ட்டர்ஸ்



