பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும் இந்தோனேசியாவும் பேச்சு

1 Min Read

பாதுகாப்பு, கடல்சார் வர்த்தகம், முதலீடுகள், மருந்துத் தொழில் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தியாவும் இந்தோனேசியாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

இந்தோனேசிய வௌியுறவு அமைச்சர் சுகியோனோவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தோனேசிய வௌிவிவகார அமைச்சர் நேற்று முன்தினம் புதுடில்லி விஜயம் செய்துள்ளார். இந்நிலையில் இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மை கடந்த சில ஆண்டுகளாக வலுவாக வளர்ச்சியடைந்துள்ளது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது இரண்டு நாடுகளது வெளிவிவகார அமைச்சர்களும் மேற்கு ஆசிய நெருக்கடியின் விளைவான பொருளாதாரப் பாதிப்புகள் குறித்தும் அரசியல், பாதுகாப்பு, கடல்சார் மற்றும் கப்பல் போக்குவரத்து, வர்த்தகம், நிதித் தொழில்நுட்பம், சுகாதாரம், மருந்துப் பொருட்கள், உரம், முக்கிய கனிமங்கள், சுற்றுலா, கல்வி மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் ஆழமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *