இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேற்றம் கண்டு புதிய வரலாறு படைத்துள்ளார்.
கடந்த வார இறுதியில் நடந்த தனது முதலாவது டயமன்ட் லீக் போட்டியான ரபாத் டயமன்ட் லீக் போட்டியில் இரண்டாவது இடத்தை வென்றதை அடுத்தே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். புதிய தரவரிசை முறை அறிமுகப்படுத்தப்பட்டது தொடக்கம் இலங்கை வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய தரநிலையாக இது உள்ளது.
தரங்க சிறந்த தூரமாக 89.37 மீற்றர் தூரம் எறிந்திருப்பதோடு 2026 இன் சர்வதேச பட்டியலில் அவர் முன்னிலை பெற்றுள்ளார். இதில் இலங்கையில் 89.37 மீற்றர் தூரம் எறிந்தது மற்றும் கென்யாவில் 89.28 மீற்றர் தூரம் எறிந்தது அதேபோன்று ரபாத்தில் 85.97 மீற்றர் எறிந்தது உள்ளது. இந்தப் போட்டிகளில் அவர் முறையே 1, 2 மற்றும் 4 ஆவது இடங்களை பிடித்திருந்தார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் இந்தத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



