அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்

1 Min Read

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி கடாஃபி மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 42 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அணித்தலைவர் ஜோஷ் இங்லிஸ் 65 ஓட்டங்கள் விளாசினார். ஷாஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஃபர்ஹான் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து 27 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மாஸ் சதாகத் அவுட் ஆனார்.

பாபர் அஸாம் நிதானமாக ஆட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. சுழற்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர்.

கோரி (8), சல்மான் (15) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, பாபர் அஸாம் 40 (84) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் போல்டு ஆனார்.

எனினும் ஷதாப் கான், அப்துல் சமாத் கூட்டணி நங்கூரமாக நின்று ஆடி அணியை வெற்றி பெற வைத்தது.

பாகிஸ்தான் அணி 41.5 ஓவர்களில் 161 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஷதாப் கான் 42 பந்துகளில் 29 ஓட்டங்களும், அப்துல் சமாத் 18 ஓட்டங்களும் எடுத்தனர். கூனமன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *