சீனாவின் தியனன்மென் சதுக்க சம்பவம் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்த கருத்துக்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அவரது கருத்துக்கள் சீனாவின் அரசியல் அமைப்பைக் களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் நேற்று கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வரலாற்று உண்மைகளைத் திரித்துக் கூறுவதற்கும், சீனாவின் அரசியல் அமைப்பு மற்றும் வளர்ச்சிப் பாதையைக் களங்கப்படுத்துவதற்கும் அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து சீனா கடும் அதிருப்தி கொண்டுள்ளது.
அத்தகைய செயற்பாடுகளை நாம் உறுதியாக எதிர்க்கிறோம்.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்ற போர்வையில் சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக குற்றம் சாட்டிய அவர், பெய்ஜிங்கின் சீனத் தன்மைகளைக் கொண்ட சோசலிசப் பாதையை அவர் ஆதரித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.



