இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி

1 Min Read

இந்தோ-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் இணக்கப்பாட்டை இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தியுள்ளன. இதன் கீழ் கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பு கைத்தொழில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்தவும் இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. இந்தியா-அவுஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர்களின் இரண்டாவது உரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இணைந்து தலைமை வழங்கிய இந்த உரையபாடலின் போது, இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கு ஒரு பொதுவான செயல்பாட்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கும், பிராந்திய கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இணைந்து செயல்படவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு குவாட் நாடுகள் அமைப்பின் தலைமையிலான கடல்சார் முன்னெடுப்புகளுக்கும் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தங்கள் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *