உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 இலட்சம் முதியவர்களுக்காக, ரூ. 3,493,915,000 நிதியை அரசாங்கம் விடுவித்துள்ளது.

கட்டங்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விபரம் பின்வருமாறு:

முதலாம் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதிய பயனாளிகளுக்காக ரூ. 3,125,600,000
இரண்டாம் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதிய பயனாளிகளுக்காக ரூ. 368,315,000

அனைத்து பயனாளிகளும் தமக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல் தமது அஸ்வெசும பயனாளிகள் வங்கிக் கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்தச் சபை மேலும் அறிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *