வெள்ளம் சூழ்ந்த லாவோஸ் குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்க குழு விரைவு

1 Min Read

லாவோஸில் உள்ள குகையொன்றில் வௌ்ள நீ்ர் புகுந்ததால் சுமார் ஒரு வாரகாலமாக அக்குகையில் சிக்கியுள்ள ஏழு கிராமவாசிகளை மீட்கும் நடவடிக்கைகள் குகைச் சுழியோடிகளால் குறுகிய பாதைகள் வழியாக நுட்பமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மத்திய லாவோஸ் மாகாணமான சைசோம்பூனில் உள்ள அந்தக் குகைக்குள் கடந்த புதன்கிழமை தங்கம் தேடி கிராமவாசிகள் சென்றனர். ஆனால் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு வெளியேறும் வழியைத் தடுத்துள்ளதாக லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்களை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குகைக்குள் தொடர்ச்சியான காற்றோட்டம் உள்ள ஒரு உயர்ந்த பாறை விளிம்பில் இக்கிராமவாசிகள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதாக லாவோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் குழுக்களில் ஒன்றான மெட்டா தாம் கலாசின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் தகவலின்படி, அவர்களைச் சென்றடைய மீட்புக் குழுவினர் 340 மீற்றர் நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாகச் செல்ல வேண்டும்.

சுரங்கப்பாதையின் சில பகுதிகள் வெறும் 60 சென்றிமீற்றர் அகலம் கொண்டதாக உள்ளதால், சிக்கியுள்ள குழுவினரை நெருங்குவதற்கு மீட்புக் குழுவினர் தவழ்ந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை மீட்கும் பணியில் இரண்டு தாய்லாந்து சுழியோடிகளும் ஒரு பின்லாந்து நிபுணரும் நேற்று முன்தினம் இணைந்துள்ளனர். சி.என்.என்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *